அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள்: மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அமைதியான முறையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 16 பகுதிகளில் நடைபெற்றது.
அசாமில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 5 வாக்குகள்
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ஒரே நேரத்தில் பாஜகவுக்கு 5 ஓட்டுக்கள் பதிவான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது. எனவே இது குறித்து பல கட்சியினரும் கேள்விகள் எழுப்ப தொடங்கினர். இந்நிலையில் இது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோ மாதிரி வாக்குப் பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. அப்போது போது EVM இயந்திரத்தில் ஒரு தடவை அமுக்கினால் 5 வாக்குகள் பாஜகவுக்கு பதிவாகியது. அதன்பிறகு அந்த இயந்திரத்தில் உள்ள கோளாறுகளை சரி செய்த பின்னரே வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டது என்று தேர்தல் அதிகாரி விளக்கம் கொடுத்துள்ளார்.