
Breaking News: பெற்றோர் மாமனார் மாமியாரை பார்த்துக்கொள்ள சிறப்பு விடுமுறை: தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்களின் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அசாம் அரசு தற்போது முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெற்றோர் மாமனார் மாமியாரை பார்த்துக்கொள்ள சிறப்பு விடுமுறை
அதாவது அசாம் அரசு தங்களுடைய பணியாளர் தங்களது பெற்றோர் அல்லது மாமியார் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக வருகிற நவம்பர் மாதம் 2 நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நடப்பாண்டில் வரும் நவம்பர் 6ம் தேதி மற்றும் 8ம் தேதி உள்ளிட்ட 2 நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடுப்பு தனிப்பட்ட சொந்த காரியத்துக்காக இருக்க கூடாது என்றும் மாநில அரசு ஊழியர்கள் அவர்களின் பெற்றோர் அல்லது மாமனார்- மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்கான சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மேலும் பெற்றோர் அல்லது மாமனார்- மாமியாரை கவுரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும் தான் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற நவம்பர் 7ஆம் தேதி சத் பூஜை என்பதால் அன்று விடுமுறை என்றும்,
அதே போல் நவம்பர் 9ஆம் தேதி 2வது சனிக்கிழமை விடுமுறை என்றும் மற்றும் நவம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் சிறப்பு விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது
தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறை
தமிழ்நாட்டில் நாளை (12.07.2024) மின்தடை பகுதிகள்
assam – government – employees – special – leave – latest news