Breaking News: ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்த ஏத்தர் நிறுவனம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் போன்கள், வாட்ச்கள் மற்றும் டிவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் தொழில்நுட்பங்களுடன் கூடிய புது புது அம்சங்களுடன் கண்டுபிடித்து வருகின்றனர். இது மட்டுமா, நம் நினைத்த இடத்திற்கு வேகமாக செல்ல பயன்படுத்தும் பைக்குகளிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கான அம்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்த ஏத்தர் நிறுவனம்
அப்படி நம் பைக்கில் செல்லும் போது உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணிவது அவசியம். தலைக்கவசம் உயிர் கவசம் என்று கூவி கூவி சொன்னாலும் கூட சில பேர் அதை பொருட்படுத்தாமல் ஹெல்மெட் அணியாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மிகவும் பிரபலமான ஏத்தர் நிறுவனம் தற்போது ஏத்தர் ரிஸ்ட்டா என்ற ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டருடன் சேர்த்து ஹாலோ என்ற ஸ்மார்ட் ஹெல்மெட்டையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Also Read: தமிழக உள்துறை செயலாளர் உட்பட 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அதிரடி உத்தரவு!!
ஸ்மார்ட் ஹெல்மெட்டின் சிறப்பு அம்சங்கள் :
- ஸ்மார்ட் ஹெல்மெட்டில் ஆட்டோ வியர் டிடெக்ட் டெக்னாலஜி உள்ளது, தெளிவாக ஹெல்மெட் சரியாக அனையப்பட்டுள்ளதா என்று கண்காணித்து எச்சரிக்கும்.
- அதுமட்டுமின்றி ஹெல்மெட் உள்ளே கேட்கும் மியூசிக் மற்றும் அழைப்புகளை ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்கிரீனிலேயே கண்ட்ரோல் செய்ய முடியும்.
- மேலும் ஹெல்மெட் அணிந்து செல்லும் போது எதிராக வரும் வாகனம் அடிக்கும் ஹாரன் சத்தம் ஹெல்மெட் உள்ளே கேட்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
- அதுமட்டுமின்றி இந்த ஹெல்மெட்டிற்கு ரூபாய் 12,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஹெல்மெட் எல்லாம் ஐ எஸ் ஐ மற்றும் டிவிடி தரச்சான்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ?
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்