Breaking News: அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவையில் வாழும் விவசாயிகள் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏன் ஓராண்டு பத்தாண்டா தொடர்ந்து 60 ஆண்டுகளாக அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் போராட்டமும் அரசாங்கத்திடம் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளின் கனவு தற்போது தான் நிறைவேறியுள்ளது. அதன்படி ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை இன்று (ஆகஸ்ட் 17) முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த திட்டம் கிட்டத்தட்ட ரூ.1,916 கோடியே 41 லட்சம் செலவில் நிறைவு பெற்றுள்ளது.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம்
சிறம்பம்சங்கள்:
- ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான குளம், குட்டைகள் இருந்து வரும் நிலையில் நீர் செறிவூட்டுவதற்காக, 1,065 கி.மீ., நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
- மேலும் ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும், 8 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 6 மோட்டார்கள் மட்டும் இயக்கப்பட்டு தண்ணீர் ‘பம்ப்’ செய்யப்படும். மற்ற இரு மோட்டார்கள் மாற்று என்ற நிலையில் இருக்கும்.
- அதே போல் எலக்ட்ரிக்கல் ஆட்டோ மெஷின் மற்றும் குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ்., ஆகியவை இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. உலகின் சிறந்த ‘அப்டேட்’ தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும் இந்த குழாய் பதிக்கப்பட்டுள்ள, 1,065 கி.மீ., தொலைவில் இருந்து கொஞ்ச தூரத்தில் ரயில்வே தண்டவாளம் இருக்கும் ஐந்து இடங்களையும் கடந்தும், 5 நெடுஞ்சாலையை கடந்தும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
Also Read: சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை… ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள் – என்ன காரணம் தெரியுமா?
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?