ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம். மிஷினில் இருந்து ரூ.13 லட்சம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை பிரதான சாலையில் சவுத் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் இந்த வங்கியோட ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. தினசரி பெரும்பாலான மக்கள் இந்த ATM-யை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை நேரத்தில் ATM இயந்திரத்தில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தை ஊழியர்கள் நிரப்பி சென்றுள்ளனர். பொதுவாக ஒரு தடவை பணம் நிரப்பட்டு பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு தான் மீண்டும் இயந்திரத்தில் பணம் வைப்பது வழக்கம். ஆனால் இம்முறை 2 நாட்களிலேயே வாடிக்கையார்களால் ATM -ல் பணம் எடுக்க முடியவில்லை. அனைவருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்ற தகவலே காண்பித்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே இது குறித்து வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்த நிலையில், அதிகாரிகள் ஏ.டி.எம். இயந்திரத்தை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி நம்பர் லாக் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஏ.டி.எம்.மில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஊழியர்கள் ATM -ல் பணம் நிரப்பப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு நம்பர் பிளேட் இல்லாத காரில் 4 மர்ம ஆசாமிகள் வந்ததும், நம்பர் லாக் மூலம் அடுத்தடுத்து 2 நாட்களில் மொத்தம் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரிந்தது. குறிப்பாக இந்த கொள்ளை சம்பவம் பட்டப்பகலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது காவல்துறை கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகிறது.