இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இனி ATMல் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ATM interchange fees:
முன்பெல்லாம் நம் ஆத்திர அவசரத்திற்காக வங்கிகளில் இருக்கும் பணத்தை வங்கிகளில் சென்று தான் டெபாசிட் செய்யும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது தெருவுக்கு தெரு ATM மிஷின்கள் வந்துவிட்டது. அதன் மூலம் நமக்கு பணம் தேவைப்படும் ஏடிஎம்-க்கு சென்று பணம் எடுத்து கொள்ளலாம். இந்நிலையில் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக தற்போது ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
இனி ATMல் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்.., ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு!!
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த ஆண்டு 2025 மே 1ம் தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் அக்கவுண்ட் ஓப்பன் செய்துள்ள வங்கிகளை தவிர்த்து பிற வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பரிவர்த்தனை செய்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பணம் எடுப்பது மட்டுமின்றி, இருப்புத் தொகையை சரிபார்ப்பதற்கு இது பொருந்தும். இந்த கட்டணம் அதிகரிப்பு, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) முன்மொழிவின் அடிப்படையில் தான் ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
IPL 2025: ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?.., முழு லிஸ்ட் இதோ!!
இதற்கு முன்னர், தங்களது வங்கிகளை தவிர்த்து மற்ற நெட்வொர்க்கின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.17 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் மே 1 முதல் ரூ.19 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, மற்ற வங்கியின் ATM மிஷினில் பேலன்ஸ் செக் செய்வதற்கு ரூ.6 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் ரூ.7 ஆக வசூலிக்கப்படும்.
மேலும் இலவச பரிவர்த்தனை வரம்புக்கு மேல் எடுப்பவர்களுக்கு தான் இந்த கட்டணங்கள் பொருந்தும். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரும், ஏன் இந்த கட்டண உயர்வு என்று. பொதுவாக ஒரு பேங்க் தனது வாடிக்கையாளர்களில் ஒருவர் மற்றொரு வங்கியின் ATM மிஷினை பயன்படுத்தி பணம் எடுக்கும் பொழுது, அந்த வங்கி மற்றொரு வங்கிக்கு செலுத்தும் தொகைதான் பரிமாற்றக் கட்டணம் ஆகும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் – டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!
தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!
என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!