ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து அவர்களின் கைரேகையை கட்டாயகமாக பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது :
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைத்துள்ளனர். அதனை போல அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பதோடு கைரேகை பதிவு செய்வதை கட்டாயமாக்கியது.
தென்னிந்திய டாப் 10 ஹீரோக்களின் மொத்த வசூல்.., “ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா”.., முதல் இடத்தை பிடித்த தளபதி!!
ரேஷன் கார்டு ஒரு ஊரில் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் வெளியூரில் இருக்கும் பொழுது கைரேகை வைப்பது மிகவும் சிரமம். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி முன்னுரிமை குடும்ப அட்டைதரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கடைக்கு வந்து தான் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது தெரிவித்துள்ளார்.