ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி... விண்ணப்பிப்பது எப்படி? ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி... விண்ணப்பிப்பது எப்படி? 

ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தாங்கள் செல்லும் பயணத்திற்கு முதல் தேர்வாக ரயில் பயணத்தை தான் டிக் செய்து வருகிறார்கள். அப்படி செல்லும் பயணிகள் முன்பதிவு செய்வது மட்டுமின்றி, முன்பதிவு செய்யாத நேரத்தில் பயணச்சீட்டு அலுவலகங்கள், தானியங்கி இயந்திரங்கள், மொபைல் போன் செயலிகள் ஆகியவற்றின் மூலம் டிக்கெட்டை பெற்று கொள்கிறார்கள். அப்படி தானியங்கி இயந்திரங்கள் (Automatic Ticket Vending Machine) மூலம் டிக்கெட் பெறுவதற்கு பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை. இதனால் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஊழியர்கள் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த பணியில் சேருவதற்கு பொது மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே இந்த பணியில் மதுரை, தென்காசி, விருதுநகர்,  திருச்செந்தூர், தூத்துக்குடி, போடிநாயக்கனூர், திருநெல்வேலி, புனலூர் உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல், பழனி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்தூர், செங்கோட்டை,மானாமதுரை, திருநெல்வேலி  காரைக்குடி, கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருக்கும் தானியங்கி இயந்திர பயணச்சீட்டு விநியோக உதவியாளர் பணிக்காக பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த உதவியாளர்கள் ஓராண்டுக் காலத்திற்குப் பணி அமர்த்தப்படுவார்கள் எனவும் அதற்கு சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 11 என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அப்பா அம்மாவுக்கு அப்புறம் அவர் தான் எல்லாம்.., சோறு போட்ட கடவுள் சார்.., கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *