Breaking News: ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா: நாடு முழுவதும் பல்வேறு வங்கிக்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் மிஷின்கள் நிறுவப்பட்டுள்ளது.
அதன் மூலம் மக்கள் தங்களின் தேவைக்கேற்ப பணங்களை எடுத்து கொள்கின்றனர். இருப்பினும் பல தேவைகளுக்காக வங்கிக்கு செல்வது வழக்கம்.
ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா
குறிப்பாக வங்கியில் பணம் போடுவது, நகைகளை அடமானம் வைத்து பணம் எடுப்பது மற்றும் லோன் பெறுவது என பல்வேறு பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அன்றாடம் பேங்கை தேடி செல்கின்றனர். பொதுவாக வங்கியில் ஒவ்வொரு மாதமும் 2ம் மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அது போக ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு லீவு கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கீழே பின்வருமாறு,
Also Read: மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம் – நூதனமான பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம் – அதுவும் தமிழ்நாட்டுலயா?
தேதி | நாள் | விடுமுறை |
ஆகஸ்ட் 3 | சனிக்கிழமை | கேர் பூஜா (அகர்தலா) |
ஆகஸ்ட் 4 | ஞாயிற்றுகிழமை | வங்கி விடுமுறை |
ஆகஸ்ட் 8 | வியாழக்கிழமை | டெண்டாங் லோ ரம் ஃபேட் (காங்டாக்) |
ஆகஸ்ட் 10 | இரண்டாவது சனிக்கிழமை | வங்கி விடுமுறை |
ஆகஸ்ட் 11 | ஞாயிற்றுகிழமை | வங்கி விடுமுறை |
ஆகஸ்ட் 13 | செவ்வாய்கிழமை | தேசபக்தர் தினம் (இம்பால்) |
ஆகஸ்ட் 15 | வியாழக்கிழமை | சுதந்திர தினம் (எங்கும் வங்கி விடுமுறை) |
ஆகஸ்ட் 18 | ஞாயிற்றுகிழமை | வங்கி விடுமுறை |
ஆகஸ்ட் 19 | திங்கள் கிழமை | ரக்ஷா பந்தன் (அகமதாபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ மற்றும் பிற இடங்கள்) |
ஆகஸ்ட் 20 | செவ்வாய்கிழமை | ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கொச்சி, திருவனந்தபுரம்) |
ஆகஸ்ட் 24 | 4 சனிக்கிழமை | வங்கி விடுமுறை |
ஆகஸ்ட் 25 | ஞாயிற்றுகிழமை | வங்கி விடுமுறை |
ஆகஸ்ட் 25 | திங்கள் கிழமை | ஜன்மாஷ்டமி (கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வங்கி விடுமுறை) |