ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது இரண்டவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய playing 11 அணி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
IND vs AUS : இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலிய Playing 11 அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, 145 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்த நிலையில், அடுத்த மூன்று இன்னிங்ஸ்-களிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதியில் மொத்தம் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதனை தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து முதல் ஆட்டத்தில் ஜோஷ் ஹேசில்வுட், வார்த்தை போரில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அவர் காயம் காரணமாக விலகிவிட்டதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான, ஆஸ்திரேலிய 11 அணி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!
ஆஸ்திரேலிய அணி:
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் ஹேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன், ஸ்காட் போலாந்த்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்