கூவத்தூர் சர்ச்சை விவகாரம்
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சேலம் மாவட்டம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பதவியில் நீக்கப்பட்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கூவத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக கூறினார். அப்போது நடிகை திரிஷாவின் பெயரையும் குறிப்பிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. ஏற்கனவே மன்சூர் அலிகான் த்ரிஷாவை தவறாக பேசியது இப்போது தான் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இயக்குநர் சேரன், நடிகர் மன்சூர் அலிகான், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் ஏ.வி.ராஜு வெளியிட்டுள்ள வீடியோவில், எனக்கும் அந்த அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியொரு வார்த்தையை நான் பேசவே இல்லை, அது எப்படி செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் தவறுதலாக பேசியிருந்தால் இந்த சமூக வலைத்தளம் மூலம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.