கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றி சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதில் நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அது என்னோட உழைப்பு, முயற்சி மட்டுமே. அது மட்டுமே எனக்கு உறுதுணையாக இருந்தது என்று கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இதை விட நன்றாக உழைக்க வேண்டும் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும். குறிப்பாக ஒரு நடிகையாக இதுவரை எந்த நடிகையும் சாதிக்காத சாதனையை நான் புரிய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவரின் ஆசை காதலனான ஜாக்கியுடன் அடுத்த மாதம் கல்யாணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த, நிலையில் திருமணத்திற்கு பிறகு அவரின் ஆசை நடைபெறுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.