“அயலான்” திரைவிமர்சனம் :
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ரவிக்குமார் இயக்கிய நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த அயலான் படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். படத்தின் ஓப்பனிங் சீனில் ஒரு வினோதமான கல் ஒன்று ஏலியன் கிரகத்தில் இருந்து பூமியில் இருந்து விழுகிறது. அந்த கல்லால் பல தீமைகள் நடக்கிறது. மேலும் அந்த கல்லை பயன்படுத்தி வில்லன் ஆதாயம் தேட நினைக்கும் போது தான் ஒரு ஏலியன் பூமியை வந்தடைந்து சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் புகுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த ஏலியனுடன் சேர்ந்து பூமியை சிவகார்த்திகேயன் காப்பாற்றினாரா இல்லையா அதுவே மீதி கதை. இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் வில்லன் காமெடியன் எல்லாரும் அற்புதமாக நடித்திருந்தனர். குறிப்பாக ஏலியன் வரும் காட்சிகள் எல்லாம் சூப்பராக உள்ளது. மேலும் சிஜி ஒர்க் பிரம்மாண்டம். படத்தோட கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் எமோஷனலாக காட்டி இருக்கலாம். ஏலியன் அது கிரகத்திற்கு செல்லும் போது ரசிகர்களிடம் யாரிடமும் எமோஷனல் இல்லை.
நடிப்பு அரக்கன் தனுஷின் “கேப்டன் மில்லர்” படம் எப்படி இருக்கு?.., முழு திரைவிமர்சனம் இதோ!!
அதுமட்டுமின்றி பாடல்கள் எதுவும் படத்திற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. ரகுமானின் BGM ஒரு சில இடங்களில் நன்றாக இருந்தது. நகைச்சுவையும் படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. குறிப்பாக இந்த படத்தை குழந்தைகள் கொண்டாடுவார்கள். விஜய்யின் புலி படத்திற்கு பிறகு குழந்தைகளை சிவாவின் அயலான் படம் கவரும். மேலும் இந்த படத்திற்கு ரேட்டிங் 5 க்கு 3.5 கொடுக்கலாம்.