கேப்டன் மில்லர் பட வசூலை தூக்கி சாப்பிட்ட அயலான்.., மொத்த இத்தனை கோடி வசூலா? பொங்கல் ரேஸ் கிங் சிவா தான் போலயே!!கேப்டன் மில்லர் பட வசூலை தூக்கி சாப்பிட்ட அயலான்.., மொத்த இத்தனை கோடி வசூலா? பொங்கல் ரேஸ் கிங் சிவா தான் போலயே!!

பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏதாவது பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அயலானும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படமும் போட்டி போட்டது. இந்த இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில், தற்போது மொத்த வசூல் விவரம் குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியான ஏழு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ரூ 59 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் அதே ஏழு நாளில் ரூ 60 கோடி வசூலித்து கேப்டன் மில்லர் படத்தின் வசூலை முறியடித்து பொங்கல் ரேஸில் வெற்றி பெற்று வருகிறது. மேலும் இனி வரும் நாட்களில் இந்த இரண்டு படங்களும் கூடுதல் வசூலை அள்ளும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  

அப்பாட.., ஒருவழியா சிங்கிள் விரதத்தை விஷால் முடிச்சுட்டாருப்பா? விரைவில் அந்த நடிகையுடன் கெட்டிமேளம் தான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *