அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
இந்நிலையில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கட் நாராயணா கோவிலில் 10.5 அடி உயரத்திற்கு ஸ்ரீராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு அன்று ஒரு லட்சம் லட்டு வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.