அயோத்தி ராமர் கோவில் கதவுகள். உத்தரபிரதேசம் ஸ்ரீ ராமர் கோவிலின் கருவறையில் தங்க முலாம் பூசப்பட்ட கதவு நிறுவப்பட இருக்கிறது. மொத்தம் 42 கதவுகள் தங்கமுலாம் பூசப்பட்ட கதவுகளாக நிறுவப்பட இருக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் கதவுகள்
ஸ்ரீ ராமரின் ஜனன பூமியான அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் முடிந்து வருகிற ஜனவரி 22 ந் தேதி திறக்கப்பட உள்ளது. 3 மாடிகள், 5 கோபுரங்கள், 6 மண்டபங்கள் மற்றும் 360 தூண்கள் என மொத்தம் 2.7 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு ரயில்கள் 2024 ! நேரம் மற்றும் இடம் முழு விபரம் !
கருவறை என்பது தானே ஒரு கோவிலின் அஸ்திவாரம். அந்த கருவறையில் 12 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள் அமைக்கப்பட உள்ளது. இன்னும் 3 நாட்களுக்குள் 13 தங்க முலாம் கதவுகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 46 கதவுகளில் 42 கதவுகள் தங்க கதவுகள் ஆகும்.
இந்த 42 கதவுகள் மொத்தமாக 100 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள் ஆகும். இந்த கதவினில் யானை தும்பிக்கை தூக்கி கொண்டும், அதற்கு மேலே அரண்மனை போன்ற வடிவிலும், பூ வேலைபாடுகளும் இடம் பெற்றுள்ளன.