அயோத்தியில் பிரம்மாண்டமான கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. நேற்று பொது மக்கள் உள்ளே அனுமதிக்க படாமல் இருந்த நிலையில், இன்று முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய கலைஞன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி பிவானியில் “ராம் லீலா” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் என்ற நாடக கலைஞர் அனுமன் வேடம் அணிந்து சிறப்பாக நடித்து கொண்டிருந்தார். பக்தர்களை வெகுவாக கவர்ந்து கொண்டிருந்த ஹரிஷ் திடீரென சுருண்டு விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதை பார்த்த பக்தர்கள் அவர் நடிப்பின் வெளிப்பாட்டின் ஒரு பகுதி என நினைத்தனர். தொடர்ந்து எழாமல் இருந்ததை அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.