‘பாகுபலி கிரவுன் ஆப் பிளட்’ – அனிமேடட் வெப் சீரிஸ் ப்ரோமோ வெளியீடு
‘பாகுபலி கிரவுன் ஆப் பிளட்’ – அனிமேடட் வெப் சீரிஸ் ப்ரோமோ வெளியீடு : பிரம்மாண்ட இயக்குநராக ராஜ மௌலி படைப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பாகுபலி பார்ட் 1 படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்பொழுது டிவியில் போட்டாலும் கூட ரசிகர்கள் கொண்டாடி தான் வருகிறார்கள். இந்நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது ‘பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்’ என்ற தலைப்பில் வரும் மே 17ம் தேதி முதல் டிஸ்னி- ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இந்த வெப் சீரிஸின் கதை பாகுபலி படத்தின் முன் நடந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக இக்கதையை உருவாக்கி வரும் ராஜ மௌலி மற்றும் ஷரத் தேவராஜன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி பல்வால் தேவனின் மகனுக்கு பின்னாடி இருக்கும் கதையும், மகிழ்மதி அரசாங்கத்தின் பின்னாடி இருக்கும் கதையும் ‘பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்’ வெப் தொடரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.