பாக்கியலட்சுமி சுசித்ரா
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களின் அதிக ஆதரவை பெற்ற சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தொடர் தான். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண், சூதுவாது தெரியாமல் இருந்து கணவரின் துணையின்றி பல மோதல்களை சந்தித்து வருகிறார். இந்த தொடரில் லீடு ரோலில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகை சுசித்ரா. இந்த தொடரில் நடித்ததன் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கியமான போட்டோவை வெளியிட்டுள்ளார். அதாவது, பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா 13 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட Throwback புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் வாயடைத்து போய் உள்ளனர். அதுமட்டுமின்றி ரசிகர் ஒருவர் அப்பொழுதை விட இப்போ தான் அழகா இருக்கீங்க என்று கருத்து தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தன்னுடைய வாயால் மொத்தத்தையும் இழந்த மன்சூர் அலிகான்., இப்போ கட்சியும் போச்சா?.., நிர்வாகிகள் அதிரடி முடிவு!!
