தமிழத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தமிழகம் வர உள்ளதால் தற்போது இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் படுகொலை :
நேற்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த கொலை சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். அத்துடன் அருகிலிருந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாயாவதி தமிழகம் வருகை :
அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக மாயாவதி இன்று தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலவர் ஸ்டாலின் அறிக்கை :
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும்,
மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும்,
நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் !
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் கட்சி தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்
மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.