பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆம்ஸ்ட்ராங் படுகொலை :
நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படுகொலையில் சம்மந்தப்பட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை அரசிற்கு எதிராக தெரிவித்து வருகின்றனர்.
கொலையாளிகள் வாக்குமூலம் :
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பு வாக்கு மூலத்தை அளித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்க்கரை அருகில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஆர்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்க்கு தொடர்பு இருந்தாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங் உதவியதாலேயே ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !
அந்த வகையில் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கப்படாததால் இரு தரப்பிற்கும் இடையில் முன் விரோதம் நீடித்து வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆர்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நினைவு அஞ்சலிக்குள் ஆம்ஸ்ட்ராங்கை கொள்ள திட்டமிட்டதாகவும்,
தற்போது இந்த சம்பவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும் ஆற்காடு சுரேஸின் தம்பி ஆற்காடு பாலு வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.