கருணாநிதி மகன் வீட்டில் நடந்த கொடூரம்.., 3 தனிப்படைகள் அமைத்து தேட தொங்கிய போலீஸ்., ரேகாவுக்கு நியாயம் கிடைக்குமா?கருணாநிதி மகன் வீட்டில் நடந்த கொடூரம்.., 3 தனிப்படைகள் அமைத்து தேட தொங்கிய போலீஸ்., ரேகாவுக்கு நியாயம் கிடைக்குமா?

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை. தி.மு.க MLA கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெலினா இருவரும் தங்கள் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதை கண்டித்து பிப்.1 ல் அ,தி.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் அவர்கள் சரணடையும் நாளிலே ஜாமீன் குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை

தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பரவும் செய்தி என்னவென்றால் தி.மு.க MLA கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய செய்தி தான். 5 நாட்களுக்கு முன்னர் அந்த பணிப்பெண் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாங்கமுடியாத அளவிற்கு பெரும் சித்திரவதைக்கு ஆளானார் அந்த இளம்பெண்.

அந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலே அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். தற்போது அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று போலீசார் தேடிவருகின்றனர். இதற்கிடையில் அவர்கள் ஜாமீன் குறித்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. அதில் ஆண்டோ மற்றும் மெலினா இருவரும் சரணடையும் நாளிலே ஜாமீன் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ. அருள்.., திமுகவினர் செய்த அடாவடி சம்பவம்.., என்ன நடந்தது?

மேலும் இந்த விவகாரத்தை கண்டித்து அ,தி.மு.க வினர் பிப்.1 ல் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அ,தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது :

பணிக்கு சென்ற பட்டியலின மாணவி மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் குடும்பமே கொத்தடிமை தனத்தை நடைமுறைப்படுத்துகிறது.

JOIN WHATSAPP GET IMPORTANT NEWS

தி.மு.க அதிகார வர்க்கம் வழக்கம் போல குற்றவாளிகளை காப்பாற்ற அதிகாரத்தை பயன்படுத்துகிறது.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *