உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி 10 ஆயிரம் மட்டுமே முன்பணம் கொடுத்து வாங்கி செல்லலாம் என்று கூறப்படுகிறது.
குறைந்த பட்ஜெட்டில் இருசக்கர வாகனங்களை வாங்க நினைக்கும் BIKE ரைடர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டது தான் பஜாஜ் ஃப்ரீடம் 125. உலகின் முதல் CNG-இயங்கும் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், வாகன சந்தையை புயல் தாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பைக் புதுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி.., 10 ஆயிரம் கொடுத்து பைக்கை எடுத்துட்டு போங்க.., குறைந்த விலையில் அதிக மைலேஜ்!!
மேலும், இந்த பைக் லிட்டருக்கு 60 முதல் 65 கிலோமீட்டர் வரை மைலேஜைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அன்றாடம் வாகனம் ஒட்டி உழைக்கும் ஓட்டுநர்களுக்கு செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வாகனத்தில் புது புது அம்சங்களை கொடுத்துள்ளது. அதன்படி, அதிநவீன CNG தொழில்நுட்பம், மலிவு விலை மற்றும் விதிவிலக்கான எரிபொருள் சிக்கனத்துடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?
மேலும், இந்த மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆன்-ரோடு விலை நியாயமான ரூ.1,03,000 என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் ரூ.10,000 முன்பணம் செலுத்துவதன் மூலம் இந்த பைக்கை வாங்கிக்கொள்ளலாம். அதன்படி, முன்பணம் செலுத்திய பிறகு நமக்கு தேவைப்படும் கடன் தொகை ரூ.93,657 ஆகும். மீதம் இருக்கும் பணத்தை 3 வருட காலத்திற்கு ரூ.3,000 மாதாந்திர EMI-களுடன் சேர்த்து கட்டி கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் நாளை (22.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
TVK தலைவர் விஜய்யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!