தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் - தலைமை ஹாஜி அறிவிப்பு !தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் - தலைமை ஹாஜி அறிவிப்பு !

தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும். தமிழகத்தில் வரும் ஜூன் 17 ஆம் தேதி ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த ஈகை திருநாளான பக்ரீத் திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இதனையடுத்து இந்த நாளில் பக்ரீத் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

இந்நிலையில் இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *