இன்ஸ்டா பேஸ்புக் பயன்படுத்த தடை: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைலில் மூழ்கி வருகின்றனர். 24 மணி நேரமும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள், சோசியல் மீடியாவை பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
இன்ஸ்டா பேஸ்புக் பயன்படுத்த தடை
இன்னும் தெளிவாக சொல்ல போனால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு ஒரு திட்டத்தை தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சட்டத்தை உருவாக்க ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இருக்கும் காலகட்டத்தில் சோசியல் மீடியாவில், பல தவறான மோசமான உள்ளடக்கங்கள் இருந்து வருகிறது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
எனவே அதன் மூலம் சிறுவர்களுக்கு மன அளவில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே மேற்கண்ட செயலிகளை 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பார்ப்பதற்கு தடை செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு