பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்
சமீபத்தில் பெங்களூரில் உள்ள பேமஸ் ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1 ஆம் தேதி எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தை ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஒரு நபர் கையில் வைத்திருந்த ஒரு பையை வைத்து விட்டு கிளம்பிவிட்டார். அங்கிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அந்த பையில் இருந்த மர்ம பொருள் வெடித்தது. இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறை தேடி வருகிறது. மேலும் இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியானது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளியை பிடித்து கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை என்.ஐ.ஏ வெளியிட்டு, தகவலை தெரிவிக்க என்.ஐ.ஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளதாக என்.ஐ.ஏ போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர் சபீர் என்பது தெரிய வந்தது. அந்த நபரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.