முன்னாள் CSK வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தார் பெங்களூர் PF ஆணையர். சோகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.
CSK வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்?
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமாக விளங்கியவர் தான் ராபின் உத்தப்பா. இவர் கடந்த 2006 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்துள்ளார். கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கொண்டார்.
மேலும் இவர் IPL போட்டிகளில் சென்னை அணிக்கு மட்டுமின்றி, பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணியுலும் விளையாடியுள்ளார். ஓய்வு பெற்ற அவர், செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை ன் நடத்தி வருகிறார்.
Also Read: பஜாஜ் சேடக் 35 சீரிஸ் அறிமுகம்?.., விலை எவ்வளவு தெரியுமா?.., முழு விவரம் இதோ!
அந்த நிறுவனத்தில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.23 லட்சம் PF பணத்தை கணக்கில் செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக அவர்க்கு டிசம்பர் 4 ஆம் தேதி ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதிக்குள் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ராபின் உத்தப்பா தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil News Website)
அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் – அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !
ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து .., 2 பேர் பலி .., வெளியான ஷாக்கிங் தகவல்!