ராமேஸ்வரம் கபேயின் ஓனர் யார் தெரியுமா ? ஒருநாள் வருமானம் இவ்வளவா ? - ஆச்சர்யமூட்டும் ராமேஸ்வரம் கபே !ராமேஸ்வரம் கபேயின் ஓனர் யார் தெரியுமா ? ஒருநாள் வருமானம் இவ்வளவா ? - ஆச்சர்யமூட்டும் ராமேஸ்வரம் கபே !

ராமேஸ்வரம் கபேயின் ஓனர் யார் தெரியுமா ?. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இயங்கிக்கொண்டிருக்கும் உணவகம் ‘ராமேஸ்வரம் கஃபே’. இந்த உணவகம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ள இந்த ஹோட்டலில் தான் தற்போது வெடிகுண்டு வெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மிகவும் பிரபலமான உணவகமாக இந்த ராமேஸ்வரம் கஃபே உள்ளது. திவ்யா ராகவேந்திர ராவ் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகிய இருவரும் இணைந்து 2021 ஆம் ஆண்டு இந்த உணவகம் தொடங்கப்பட்டது. இதில் திவ்யா ஐ.ஐ.எம் அலகாபாத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். ராகவேந்திர ராவ் 15 ஆண்டுகளுக்கு மேலாக கேட்டரிங் துறையில் அனுபவம் பெற்றவர்.

இந்தநிலையில் திவ்யா ராகவேந்திர ராவ் மற்றும் ராகவேந்திர ராவ் தம்பதி பெங்களூர் ஷேசாத்ரிபுரத்தில் உணவு வண்டியில் தோசை மற்றும் இட்லி வகைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். உணவின் தரம் மற்றும் சுவை அருமையாக இருந்த காரணத்தால் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைக்க மேலும் இவர்களது உணவகம் வளர்ச்சியடைய தொடங்கியது.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் களம் அவர்களின் நினைவாக அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தை அடிப்படையாக கொண்டு உணவகத்திற்கு ராமேஸ்வரம் கஃபே என்று பெயர் சூட்டினார். மேலும் இந்த உணவகம் பெங்களூரில் மட்டுமல்லாமல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதிலும் கிளைகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Playstore-லிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 10 இந்திய App-கள்.., Google நிறுவனம் வைத்த செக்., என்ன காரணம் தெரியுமா?

தென்னிந்திய உணவு வகைகளையே விநியோகிக்கும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் காலை உணவாக நெய்ப்பொடி இட்லி மற்றும் மசாலா தோசை என பல்வேறு உணவு வகைகள் விற்கப்படுகிறது. இந்த ஹோட்டல் உணவுகளின் தரம் மற்றும் சுவை காரணமாக மிக வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. மேலும் இந்த ஹோட்டலில் வழங்கப்படும் காபி, தோசை, இட்லி, சாம்பாருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்த நிறுவனத்தின் மாத வருமானம் குறித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ரூ. 4.5 கோடி வருமானமும், ஆண்டுக்கு ரூ.50 கோடி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்பட்டிருந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவ்வாறு வேகமாக வளர்ந்து வந்த ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். மேலும் இந்தியாவில் பிரபலமான உணவகங்களில் குண்டு வெடிப்பது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே உணவகங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *