Breaking News: வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு: வங்க தேசத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு ஓடினார்.
வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு
இருப்பினும் கலவரம் அடங்காத நிலையில் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு சம்பந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகள் என அனைத்தையும் தீக்கிரையாக்கினர். இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில், ராணுவம் புகுந்து ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வாங்கிய முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Bangladesh Government
இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிபர் சஹாபுதீன், முப்படை தளபதிகள், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் பொருப்பேற்க முடிவு எடுக்கப்பட்டது. Bangladesh issue
Also Read: வங்கதேசத்தில் ஓயாத வன்முறை: ஓட்டலுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் – பரிதாபமாக போன 20 உயிர்!!
இதையடுத்து அதிபர் முகமது சகாபுதீன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இப்பொது உங்களுக்கு ஒரு கேள்வி வரும் யார் இந்த முகமது யூனிஸ் என்று? இவர் வறுமையை எதிர்த்து போராடியவர். இதற்காக தான் 2006ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு பெற்றார். அதுமட்டுமின்றி வறுமையை எதிர்த்து கொடி பிடித்த இவரை மக்கள் “ஏழைகளின் பங்காளன்” என்று அழைத்து வருகிறார்கள். Nobel Laureate Muhammad Yunus
கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்
அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி
பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா