Breaking News: வங்கதேசத்தில் ஓயாத வன்முறை: வங்க தேசத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை தலைவிரித்து ஆடி வருகிறது. கடந்த 1971 ம் ஆண்டு நடந்த போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு சிவில் சர்வீஸ் மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்ந்து நடைபெற்று வருவதால் இப்பொழுது இருக்கும் வேலையில்லா இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வங்கதேசத்தில் ஓயாத வன்முறை
இதனால் தான் மாணவர்கள் தற்போது வன்முறையை கையாண்டு வருகின்றனர். இன்று வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைத்தனர்.
இந்த சூழல் அடங்கும் முன்பே, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சியின் பொது செயலாளர் ஷானின் சக்லதார் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
Also Read: 17 ஆண்டுகள் நடந்த பாசப்போராட்டம் – கணவனிடம் இருந்து மகளை மீட்ட அயர்லாந்து தாய்!
இந்த சம்பவத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி வங்க தேசம் முழுவதும் இருக்கும் பங்களாதேஷ் அவமி லீக் கட்சிக்கு சம்பந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்டவைகளை போராட்டக்காரர்கள் தீ வைத்து வருகின்றனர்.
கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்
அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி
பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா