Bank Of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு 2023. இந்தியாவில் மட்டும் சுமார் 3ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி கிளைகளை கொண்டுள்ளது. இங்கு மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம்.
Bank Of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி போதும் !
நிறுவனத்தின் பெயர் :
பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் காலிப்பணியிடங்கள் இருப்பதாக வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
Financial Solutions Limited – மண்டல உறவு மேலாளர் பணியிடங்கள் வங்கியில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
மூன்று மண்டல உறவு மேலாளர் பணியிடங்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசின் சார்பில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி :
18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! 600 பணியிடங்கள் காலியாக உள்ளது !
சம்பளம் :
ரூ. 35,800 முதல் ரூ. 78,500 வரையில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான மண்டல உறவு மேலாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.
அனுபவம் :
வங்கியில் காலியாக இருக்கும் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களுக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரையில் மேலாளர் பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.
முக்கிய தகுதி :
1. விற்பனை ( sales )
2. கிரெடிட் கார்டு ( credit card )
3. சில்லறை சொத்துக்கள் ( retail assets )
4. குழு நிர்வாகம் ( team management )
5. சந்தைப்படுத்துதல் ( marketing ) போன்றவைகள் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தெரிந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
22.09.2023 முதல் 07.10.2023 வரையில் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் மூலம் மேற்கண்ட வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்ப முடியும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பக்கட்டணம் :
இணையதளத்தின் மூலம் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
1. மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்க் கிளிக் செய்ய வேண்டும்.
2. மண்டல உறவு மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருக்கும்.
3. அதில் மேலே இருக்கும் sign in to apply என்பதை கிளிக் செய்து மின்னஞ்சல் முகவரி கொடுத்து login செய்தால் கடவுச்சொல் மின்னஞ்சல் முகவரிக்கு வரும்.
4. இந்த கடவுச்சொல் பயன்படுத்தி விண்ணப்பபடிவத்தினை நிரப்ப வேண்டும்.
5. விண்ணப்பபடிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்த பின் submit கொடுக்க வேண்டும்.
6. நிரப்பிய விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்த பின் பிரிண்ட் செய்து கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கும் முறை :
1. ஆன்லைன் தேர்வு / எழுத்து தேர்வு
2. நேர்காணல் மூலம் தகுதியான மண்டல உறவு மேலாளர் பணியிடங்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர்.