தங்கச்சி புருஷனை கேட்ட ஐஸ்வர்யா
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய மகள்கள் தான் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா. சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் அடுத்த படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் ஐஸ்வர்யா தங்கை கணவர் மீது விருப்பம் காட்டியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, சௌந்தர்யா கணவர் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் ஐஸ்வர்யா தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு சௌந்தர்யா அவருக்கு நடிப்பு எல்லாம் வேண்டாம். அவர் பிசினஸை பார்த்துக்கட்டும் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து செய்துள்ளார். குடும்பத்தில் ஒருவர் நடித்தால் போதும் என்று கூறி பிரச்சினையை முடித்துள்ளார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.