Home » செய்திகள் » IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி – பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் அறிவிப்பு !

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி – பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் அறிவிப்பு !

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி - பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் அறிவிப்பு !

IPL தொடரில் போடப்பட்ட 323 டாட் பந்துகளுக்கு 1.61 லட்சம் மரக்கன்று நடும் பணி. தற்போது IPL கிரிக்கெட் போட்டியானது சிறப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில்,ப்ளே ஆஃப்ஸ் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும் 500 மரக்கன்றுகள் வீதம் நடப்படும் என்று பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ சார்பில் தற்போது நடப்பு IPL தொடரின் ப்ளே ஆஃப்ஸ் சுற்று போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும் 500 மரக்கன்றுகள் வீதம் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணிகளை பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் தொடங்கியுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு !

அந்த வகையில் இந்தாண்டு IPL தொடரில் குவாலிபையர், எலிமினேட்டர் சுற்று மற்றும் இறுதி போட்டி என அனைத்தையும் சேர்த்து மொத்தம் 323 டாட் பந்துகள் போடப்பட்டுள்ள நிலையில் 1,61.500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் வீசப்பட்ட 294 டாட் பந்துகளுக்கு 1,47,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top