ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா ? - தேர்வாகும் பட்சத்தில் இளம் வயதில் ICC பொறுப்பேற்கும் வாய்ப்பு !ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா ? - தேர்வாகும் பட்சத்தில் இளம் வயதில் ICC பொறுப்பேற்கும் வாய்ப்பு !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஐசிசியின் தலைவராகும் புதிய ஜெய்ஷா, இதனை தொடர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் கவுன்சிலின் உயர்ந்த பதவியை அமர அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஐசிசி தலைவராக இருந்து வரும் நியூசிலாந்தை சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் தனது பதவிக்காலத்தை நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து தற்போது ICC தலைவர் போட்டியிலிருந்து அவர் அதிகாரபூர்வமாக விலகியுள்ளார்.

அந்த வகையில் பார்க்லேயின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 30 அன்று முடிவடையவுள்ள நிலையில் , ICC தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுக்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஐசிசி தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து ஐசிசியின் தலைவராக ஜெய்ஷாவை நியமிக்க ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்,

இது குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அதேசமயம் ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்படுவதற்கு மற்ற கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: இந்த சம்பவத்தை செஞ்சது 8 பேரு? பிரபல ஜோசியர் கணிப்பு!

இதற்கு முன்பு இந்தியாவில் இருந்து இரண்டு பேர் ஐசிசியின் தலைவர்களாக பதவி வகித்துள்ளார்.

கடந்த 1997 முதல் 2000ம் ஆண்டு வரை ஜெகமோகன் டால்மியா மற்றும் 2010 முதல் 2012ம் ஆண்டு வரை தற்போதைய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் ஐசிசியின் தலைவர்களாக பதவி வகித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்படும் பட்சத்தில்,

கிரிக்கெட் வாரியங்களின் அதிகார அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்படும் மூன்றாவது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.

மேலும் தலைவர் பதவிக்கான வேட்புமனு வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படும் பட்சத்தில்,

தேர்தல் நடத்தப்படும் என்றும் அல்லது ஒரேயொரு வேட்புமனு மட்டும் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், அவரே ஒருமனதாக தலைவர் பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்படும் நிலையில் மிகவும் இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற சிறப்பை பெறுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *