ஒளிபரப்பு பொறியியல் துறை ஆட்சேர்ப்பு 2024. தற்போது, இந்நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
ஒளிபரப்பு பொறியியல் துறை ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனம்
பணிபுரியும் இடம்:
கோவா
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
மருத்துவ அதிகாரி – 4
(Medical Officer)
மருந்தாளுனர் – 2
(Pharmacist)
வார்டு அட்டெண்டர் – 2
(Ward Attendant)
பஞ்சகர்மா தொழில்நுட்பவியலாளர் – 10
(Panchakarma Technician)
செவிலிய பணியாளர் – 10
(Staff Nurse)
பஞ்சகர்மா உதவியாளர் – 7
(Panchakarma Attendant)
ஆய்வக உதவியாளர் – 6
(Lab Attendant)
பொது தொடர்பு அதிகாரி – 1
(Public Relation Officer)
OT தொழில்நுட்ப வல்லுநர் – 1
(OT Technician)
தோட்டம் மேற்பார்வையாளர் – 2
(Garden Supervisor)
அருங்காட்சியக காப்பாளர் – 2
(Museum Keeper)
தகவல் தொழில்நுட்ப உதவியாளர் – 2
(Information Technology Assistant)
உதவி நூலகம் அதிகாரி – 1
(Assistant Library Officer)
வரவேற்பாளர் – 2
(Receptionist)
உதவி மையம் வரவேற்பாளர் – 2
(Help Desk Receptionist)
மொத்த காலியிடங்கள் – 54
தகுதி:
மருத்துவ அதிகாரி – MD/MS ஆயுர்வேதம் பட்டம் மருத்துவ அனுபவத்துடன் பெற்றிருக்கவேண்டும்.
மருந்தாளுனர் – மருந்தகம் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம், 2 முதல் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வார்டு அட்டெண்டர் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மருத்துவமனையில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பஞ்சகர்மா தொழில்நுட்பவியலாளர் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பஞ்சகர்மாவில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
செவிலிய பணியாளர் – செவிலியர் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்று செவிலியராக பதிவு செய்யப்பட்டவராக இருக்கவேண்டும்.
பஞ்சகர்மா உதவியாளர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பஞ்சகர்மா உதவியாளருக்கான சான்றிதழ் மற்றும் பஞ்சகர்மா உதவியாளராக ஒரு வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
ஆய்வக உதவியாளர் – இளங்கலை பட்டம் அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி 2 முதல் 4 ஆண்டு அனுபவத்துடன் பெற்றிருக்கவேண்டும்.
பொது தொடர்பு அதிகாரி – MBA/MPH அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
IFSCA Grade A ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – RS.44,500 முதல் 89,150 வரை மாத சம்பளம் !
OT தொழில்நுட்ப வல்லுநர் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டம் பெற்று, 3 முதல் 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
தோட்டம் மேற்பார்வையாளர் – தோட்டக்கலையில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் மற்றும் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
அருங்காட்சியக காப்பாளர் – ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்று, சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
தகவல் தொழில்நுட்ப உதவியாளர் – கணினி பொறியியலில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் மற்றும் பனி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
உதவி நூலகம் அதிகாரி – நூலகம் சார்ந்த துறையில் முதுகலை பட்டம் மற்றும் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வரவேற்பாளர் & உதவி மையம் வரவேற்பாளர் – ஏதேனும் இளங்கலை பட்டம் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 28,30,35,45 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
பதவிகளுக்கு ஏற்ப ரூ.17,190 முதல் ரூ.70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 09.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல், திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.