B.Ed வினாத்தாள் கசிந்த விவகாரம் - அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர் - என்ன நடந்தது?B.Ed வினாத்தாள் கசிந்த விவகாரம் - அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர் - என்ன நடந்தது?

B.Ed வினாத்தாள் கசிந்த விவகாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் B.Ed மாணவர்களுக்காக நடத்தக் கூடிய 4-வது செமஸ்டர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 27ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முன்னதாக அறிவித்திருந்தது.  

B.Ed வினாத்தாள் கசிந்த விவகாரம்

அந்த வகையில் இன்று B.Ed படிப்புக்கான creating an inclusive school தேர்வுக்கு முன்பே கசிந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எந்த தேர்வுகள் இருந்தாலும் சரி தேர்வுக்கு முதல் நாள் தான் வினாத்தாள்கள் சீலிட்ட கவர்களில் அனுப்பப்படுவது வழக்கம். தேர்வு ஆரம்பிக்க இருக்கும் சில நிமிடங்களில் தான் தேர்வு வினாத்தாள்கள் சீலிட்ட கவரை பிரித்து மாணவர்களுக்கு கொடுப்பார்கள்.

ஆனால் நேற்று இரவே creating an inclusive school என்ற பாடத்தின் தேர்வுக்கான வினாத்தாள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரலான நிலையில், 195 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர் – சோகத்தில் ரசிகர்கள்!

இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே கேள்வித்தாள்களை 2000 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய பதிவாளராக ராஜசேகரை நியமித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. bed 4th semester question paper leak issue 2024

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *