கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர் என்னும் கிராமத்தில் தேர் கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் 150 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து
மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர் என்னும் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இன்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர். சந்தோஷத்தில் இளைப்பாறி பக்தர்கள் தேரை இழுத்து சென்ற போது, எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து கீழே விழுந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் தேர் சாய்வதை பார்த்த பக்தர்கள் சுதாரித்துக் கொண்ட நிலையில் அங்கிருந்து ஓடியதால் அதிஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான பக்தர்களுக்கு படு காயங்கள் ஏற்பட்டது. உடனே காயமடைந்த பக்தர்களை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுக்கப்பட்டது. இப்படி 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.