பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: பெங்களூருவில் உள்ள பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாக 4 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழ்நாடு உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் புதிதாக கட்டி வந்த 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து சுக்குநூறாகியது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குறிப்பாக இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவானது டானா புயல் – அடுத்த 48 மணி நேரத்தில்..வானிலை அப்டேட் இதோ!
இந்நிலையில் பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் கட்டிட உரிமையாளர் முனிராஜ், இவரது மகன் மோகன் மீது ஹென்னுர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு
தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை
இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்