
தண்ணீர் பஞ்சம்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெங்களூரில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அங்கு அதிகமாக ஐடி நிறுவனங்கள் தான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் குடிக்கும் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக கோடை காலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது அங்கு தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் காவிரி நதியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அதிகமாக விநியோகிக்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இருப்பினும் கடந்த இரண்டு நாட்கள் குறைவான தண்ணீர் தான் விநியோகிக்கப்படுகிறது. எனவே மக்கள் தண்ணீரை சிக்கனமாக செலவிட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்களுக்கு குடியிருப்போர் நலச்சங்கம் ஒரு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ” தற்போது இருக்கும் சூழ்நிலையில் தண்ணீரை சிக்கனமாக செலவிட வேண்டும். மேலும் சிலர் தண்ணீரை வீணாக்குவதாக புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. எனவே அப்படி தண்ணீர் வீணாக்கும் நபரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் குடியிருப்பு வாசிகளை கண்காணிக்க ஆட்கள் போடப்பட்டுள்ளது என்று சங்கம் தெரிவித்துள்ளது.