பெங்களூரில் டூவீலரில் சென்ற பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் Fine: சமீப காலமாக போக்குவரத்து விதி மீறல்கள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் போக்குவரத்து விதிகளை 270 முறை மீறிய பெண்ணுக்கு ரூ 1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர்தனது பைக்கில் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது போக்குவரத்து காவல்துறை அவரை வழிமறித்து சோதனை நடத்தியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
அப்போது அவருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். இதையடுத்து போலீசுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த பெண் இதுவரை போக்குவரத்து விதிமுறைகளை 270 முறை மீறியுள்ளது தெரிய வந்தது. சொல்ல போனால் ரூ.1.36 லட்சம் அபராதத் தொகை வரை அவர் கட்டாமல் இருந்து வந்துள்ளார். இவர் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் சென்றது என பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.