குண்டு வெடிப்பு விவகாரம்
சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இதற்கு சம்பந்தமான நபரை காவல்துறை தற்போது தேடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெங்களூருக்கு மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலம், ” ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பை போன்று பெங்களூருவில் ரயில், பஸ் நிலையங்கள், கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் ” என்று கடிதம் அனுப்பி மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் தற்போது பெங்களூர் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெடிகுண்டு விபத்து குறித்து அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டு வைத்த நபரை அடையலாம் காட்டுபவருக்கு தலா 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.