Best Oil for Hair Growth. பெண்களுக்கு ஆரோக்கியமான , அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கு எண்ணெய் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணையுடன் சிறுது மூலிகைகளை பயன்படுத்தி தேய்ப்பது நமது வழக்கம். அந்த தேங்காய் எண்ணெய் மட்டுமில்லாமல் வேறு சில மூலிகைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Best Oil for Hair Growth
பெண்களின் அழகில் கூந்தல் ஒரு சிறந்த இடத்தை பெற்றுள்ளது. எல்லா பெண்களுக்கும் தங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமானதாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்கள் நீளமான கூந்தலை விட அடர்த்தியான கூந்தலை தான் அதிகம் விரும்புகின்றனர். அதனால் அழகு நிலையங்களுக்கு சென்று முடியை செயற்கை முறையில் சிகை அலங்காரம் செய்து கொள்கின்றனர். என்னதான் செயற்கை முறையில் முடியை அடர்தியானதாக காட்டிக்கொண்டாலும் இயற்கை அழகே என்றும் நிரந்தரம். அதனால் பெண்கள் வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு தலையில் மென்மையாக மசாஜ் செய்து குளிப்பதால் முடியின் வேர்க்கால்கள் தூண்டப்பட்டு முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
பூசணி விதை எண்ணெய் :
பூசணி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் முடி உதிர்வதை தடுக்கும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பூசணி விதையில் நிறைவுறா கொழுப்பு அமிலங்களான ஒலிக், லினோலிக் போன்ற அமிலங்கள் உள்ளன.மேலும் வைட்டமின் ஈ சத்தும் இதில் உள்ளது. இவை முடியின் வேர்க்காலில் தோன்றும் நோய் தொற்றை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் பூசணி விதை எண்ணையில் உள்ள “பைட்டோஸ்டெரால் ” என்ற மூலக்கூறு முடி உதிர்வுக்கு காரணமான நொதியை தடுக்கிறது. இது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் முடி உதிர்தலை தடுத்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திடீர் விபத்து.., நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்.., ஷாக்கிங் போட்டோஸ் வைரல்!!
ஆர்கான் எண்ணெய் :
ஆர்கானியா ஸ்பினோசா என்ற மரத்தின் விதைகளில் இருந்து இந்த ஆர்கான் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது “தங்க திரவம்” என்று அழைக்கப்படுகிறது. ஆர்கான் எண்ணெய் சருமம், மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு காயங்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. இது கூந்தல் பராமரிப்பு சாதனங்களில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் காரணமாக கூந்தல் சேதமடைவதை தடுக்கிறது.இதில் உள்ள லினோலிக் மற்றும் ஒலிக் போன்ற கொழுப்பு அமிலங்கள் கூந்தல் வேர்க்கால்களை வலுவாக்குவதோடு ஈரப்பதத்தை தக்கவைத்து முடி வறட்சியை போக்கும்.
ரோஸ்மேரி எண்ணெய்:
ரோஸ்மேரி தாவரத்தின் பூக்கள், இலைகள் மற்றும் தண்டுகளை நீராவியில் வேக வைத்து, காய்ச்சி ரோஸ்மேரி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது இயற்கையாகவே முடி ஆரோக்கியமானதாகவும், அடர்தியானதாகவும் வளர உதவுகிறது. முடியின் வேர்கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது தலையில் உள்ள பொடுகை நீக்கும் பண்புகளையும் பெற்றுள்ளது.
ஜோஜோபா எண்ணெய்:
ஜோஜோபா தாவரத்தின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும். இந்த எண்ணையில் வைட்டமின் பி, சி , ஈ மற்றும் தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் முடி மெலிவடைவது, உடைவது, வேர்க்கால்களில் பிளவு ஏற்படுவது போன்றவற்றை தடுத்து ஈரப்பதத்தை வைத்திருக்க உதவுகிறது. பொடுகு தொல்லையை நீக்கும்.Best Oil for Hair Growth.