வார விடுமுறை தினம் என்றால் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சாப்ட போறீங்களா. ஹோட்டல் சென்று சைவம் அல்லது அசைவம் போன்ற அனைத்து உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது தான். வீட்டில் நாம் சாப்பிடுவதை போல் ஹோட்டல்களில் சென்று சாப்பிட முடியாது. ஏனென்றால் ஹோட்டல் சென்று சாப்பிவதற்கு என்று சில கட்டுப்பாடுகள் என்று இருக்கின்றது. நாம் ஹோட்டல் சென்று சாப்பிடும் போது என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க. உணவை கையாளும் முறை
ஹோட்டலுக்கு சாப்ட போறீங்களா
1. மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் :
முதலில் நாம் ஹோட்டல் சென்று அமர்ந்த உடன் நமக்கு எந்த உணவுகள் எல்லாம் வேண்டும் என்று முடிவு செய்த பின் உணவு பரிமாறுபவரிடம் நமக்கான உணவுகளை ஆடர் செய்வது வழக்கம். ஆடர் செய்த பின் தற்போது பெரும்பாலானோர் தங்கள் கைகளில் இருக்கும் மொபைல் போன் எடுத்து பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றோம்.
நாம் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வெளியில் ஹோட்டல் சென்று சாப்பிடும் நேரம் குறைவு தான். அந்த நேரத்தையும் அருகில் இருப்பவர்களுடன் செலவிடாமல் மொபைல் போன்களில் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். இந்நேரத்தில் மொபைல்களை எடுக்காமல் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசி செலவு செய்யும் போது அனைவரும் அந்நாள் ஒரு மறக்கமுடியாத தினமாக இருக்கும்.
2. உணவுகளை பகிர்ந்து சாப்பிட வேண்டும் :
ஹோட்டலில் ஒருவர் ஆடர் செய்த உணவு வந்துவிட்டது என்றால் அதனை அவர் மட்டும் சாப்பிடாமல் உடன் வந்த அனைவருக்கும் பகிர்ந்து வைத்த பிறகே நாமும் சாப்பிட வேண்டும். இதனால் அனைவருக்கும் உணவினை பகிர்ந்த நபர் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
3. முகம் சுழிக்க வைக்க கூடாது :
நாம் ஒரு குழுவாக சேர்ந்து ஹோட்டல் சென்று சாப்பிடும் போது பெரிய இருக்கை கொண்ட இடத்தில் அமர்ந்து சாப்பிடுவோம். அவ்வாறு நாம் சாப்பிடும் போது நாம் ஆடர் செய்த உணவு நம் கை எட்டும் துரத்தினை விட அதிக தூரத்தில் இருக்கும். நாம் எழுந்து அல்லது கையை நீட்டி எடுக்கும் போது நாம் உடம்பில் இருந்து வரும் வியர்வை வாசனை முகம் சுழிக்க வைக்கும். எனவே உணவின் அருகில் இருக்கும் நபரை எடுக்க சொல்லி நான் ஆடர் செய்த உணவு தான் என்று எண்ணாமல் அனைவரும் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.
பூர்விக சொத்து வாங்க போறீங்களா ! இதையும் தெரிஞ்சுகோங்க !
4. மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது :
ஹோட்டல் இருக்கையில் கடைசி நபராய் ஒருவர் அமர்ந்திருக்கும் போது கால்களை வெளியில் நீட்டிக்கொண்டு அமர கூடாது. ஏனென்றால் கால்களை நீட்டிக்கொண்டு நாம் அமரும் போது நாம் அமர்ந்திருக்கும் முறை அவ்வழியே கை கழுவ செல்லும் மற்றவர்களும் உணவு பரிமாறும் நபருக்கும் அவைகள் ஒரு இடையூறை ஏற்படுத்தும்.
5. உணவை கையாளும் முறை :
ஹோட்டலில் நாம் சாப்பிடும் போது ஒரு இருக்கைக்கு என்று ஒரு தனி உணவு பரிமாறும் கிண்ணம் வைக்கப்பட்டு இருக்கும். இவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால் கிண்ணத்தில் இருந்து நாம் ஒரு குழம்பு அல்லது சட்னி எடுக்கும் போது மற்றவர்களின் இலைகளில் சிந்தாமல் நம் இலையில் போட்டுக்கொள்ள வேண்டும். முக்கியமாக நாம் சாப்பிட பயன்படுத்தும் கைகளைக் கொண்டு கிண்ணத்தின் கரண்டியை பயன்படுத்தக்கூடாது.
6. புரோட்டா சாப்பிடும் முறை :
அதிகம் பெயரால் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று புரோட்டா. இவைகளை நாம் சாப்பிடும் போது புரோட்டாவின் மேல் சால்னா ஊற்றி சாப்பிடும் ஆர்வத்தில் இரண்டு கைகள் பயன்படுத்தி தான் பெரும்பாலும் சாப்பிடுவோம். அப்போது சால்னா அருகில் அமர்ந்திருக்கும் நபர்களின் கண்களில் அல்லது அவர்கள் மேல் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே ஒரு கை மட்டும் பயன்படுத்தி நிதானமாக சாப்பிடுவதால் அருகில் அமர்ந்திருக்கும் நபருக்கு நம் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படும்.
7. கை கழுவும் முறை :
நாம் சாப்பிட்டு விட்டு கை கழுவும் பெரும்பாலும் ஹோட்டல்களில் டேப் பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால் நாம் நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு ஒன்றாக கை கழுவ செல்லும் போது வலது கை பயன்படுத்தி டேப் பயன்படுத்தி கைகளை கழுவி விட்டு நம் நண்பர் அல்லது குடும்பத்தினர் தான் பின்னல் நிற்கின்றார் என்று எண்ணி அப்படியே சென்று விடுகின்றோம். இதனால் பின்னல் வருபவர் நண்பர் , குடும்பத்தினர் அல்லது யாராக இருந்தாலும் நாம் சாப்பிட்ட பயன்படுத்திய கை கொண்டு டேப் பயன்படுத்தினால் மீண்டும் அதனை கழுவி விட்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் டேபினை இடது கை மூலம் பயன்படுத்தலாம்.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட கிளிக் செய்யவும்
8. பல் குத்தும் குச்சு பயன்படுத்தும் முறை :
நாம் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு தன் நண்பர் சாப்பிடுகின்றார் நாமும் போய் அருகில் அமர்வோம் என்று எண்ணி பல் குத்தும் குச்சு சாப்பிடும் நபரின் அருகில் வைத்துக் கொண்டு நாம் பயன்படுத்தும் போது சாப்பிடும் நபருக்கு ஒரு விதமான அருவருப்பு உணர்வினை ஏற்படும். இதனை தடுக்க உதடு பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்யலாம் அல்லது ஹோட்டல் வெளியில் சென்று பல் குத்தும் குச்சுகளை பயன்படுத்தலாம்.
9. பில் செலுத்தும் முறை :
அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் இறுதியான உணவு பரிமாறும் நபர் வந்து பில் கொடுத்த உடன் பில் கவுண்டர் சென்று அனைவரும் ” நான் கட்டுகின்றேன் , நான் தான் கட்டுவேன் ” என்று ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கட்டக்கூடாது. இதனால் அந்த இடத்தில் ஒரு வித சலசலப்பு ஏற்ப்படும். இவை கடை உரிமையாளருக்கு ஒரு வித கோப உணர்ச்சியை காட்டும் படி அமையலாம். இதனை தடுக்க யாராவது ஒருவர் பொறுமையாக அமைதியாக பில் தொகையை கட்டி விட்டு பின்னர் நண்பர்களுடன் பில் தொகைக்கான பணத்தினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஹோட்டலுக்கு சாப்ட போறீங்களா
மேற்கண்ட சின்ன சின்ன வழிமுறைகளை நாம் ஹோட்டல்களில் பின்பற்றும் போது மற்றவர்களுக்கு நம் மேல் ஒரு வித மதிப்பு மரியாதையை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் நாம் உடன் வருபவர்களுக்கும் ஹோட்டல்களில் இருக்கும் யாரோ ஒருவருக்கும் நாம் எந்த விதத்திலும் இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.