தற்போது பிள்ளைபாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமைய உள்ள நிலையில் தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.
பிள்ளைபாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் :
காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் பிள்ளைப்பாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (பிக் டெக்) நிறுவனத்தின் சார்பில் கவர் கண்ணாடி உற்பத்திக்கான புதிய வசதியை அமைக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது .
அந்த வகையில் இந்த தொழிற்சாலையின் மூலம் Rs.1003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. Bharat Innovative Glass Technologies Company at pillaipakkam – tn Gov Environmental Clearance
புரிந்துணர்வு ஒப்பந்தம் :
அந்த வகையில் உத்தேச முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிக் டெக் இயக்குநர் அசோக்குமார் குப்தாவுக்கும், வழிகாட்டுதல் தமிழ்நாடு நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வி.விஷ்ணுவுக்கும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
கண்ணாடி பொருட்கள் உற்பத்தி :
இந்நிலையில் நிறுவனம் இந்தியாவில் விரிவான செயல்முறைகளுடன் முன்-கவர் கண்ணாடியை தயாரிக்கவும், அத்துடன் நாட்டில் பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவும்,
மேலும் வேலைவாய்ப்பையும் கூட்டி, துல்லியமான கண்ணாடி செயலாக்க தொழில்நுட்பத்தை நாட்டிலேயே முதன்முறையாகக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?
சுற்றுசூழல் அனுமதி :
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கத்தில் சிபிகாட் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.
அந்த வகையில் பிள்ளைப்பாக்கத்தில் ரூ.640 கோடியில் பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் :
மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 – 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு
இந்திய ஓட்டுநர் உரிமம் 2024: வைத்து எந்தெந்த நாடுகளில் வாகனம் ஓட்டலாம்
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்ட நிதி ஒதுக்கீடு – மத்திய அரசு விளக்கம் !