40 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயு சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் போபாலில் , ‘யூனியன் கார்பைடு’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு வருவது 1984 டிச., 23ல் நடந்த விபத்து பற்றி தான். அதாவது, அப்போது விஷவாயு கசிவு ஏற்பட்டதில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த சுமார் 5479 பேர் உயிரிழந்தனர்.
போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!
அது போக, உடல் உறுப்புகளை இழந்து நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதன் காரணமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த ஆலையில் இருக்கும், 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்சனை கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது.
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், அடுத்த மூன்று முதல் ஒன்பது மாதங்களுக்குள் கழிவுகள் எரிக்கப்படும் என்று அதிகாரி கூறுகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.., முழு லிஸ்ட் இதோ!!
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?