அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக - பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக - பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெரும் வகையில் பல்வேறு யூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு திமுக ஏறக்குறைய தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில் அனைத்து கட்சிகளும் அடுத்தகட்ட தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தற்போது வரை அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் சென்று கொண்டிருப்பதால் இது தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.

திமுகவின் கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு ஏறக்குறைய தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில். தற்போது வரை அதிமுக கூட்டணி முழுமையடையாமல் தொடர்ந்து இழுபறியில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடத்திக்கொண்டிருந்த பாமக மற்றும் தேமுதிகவின் கோரிக்கைகள் ஏற்றுகொள்ளபடாத நிலையில் தற்போது இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

இதன் அடிப்படையில் பாமக மற்றும் தேமுதிகவும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால் தமிழக அரசியல் களத்தில் இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படும். மேலும் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற ஒரு சில கட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *