அடக்கடவுளே.., பிக்பாஸ் 7 போட்டியாளருக்கு திடீர் நெஞ்சுவலி.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.., என்ன நடந்தது?அடக்கடவுளே.., பிக்பாஸ் 7 போட்டியாளருக்கு திடீர் நெஞ்சுவலி.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.., என்ன நடந்தது?

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது 100 நாட்களை கடந்து பைனலை நோக்கி சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்று மக்கள் பயங்கர எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வினுஷா, அக்ஷயா மற்றும் அனன்யா ஆகியோர் மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளனர். மேலும் மிக் எவிக்சன் என்ற பெயரில் விஜய் வர்மா வெளியேற போவதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஒரு வாரம் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியே வந்த பவா செல்லத்துரை-க்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது அனைவரின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *