
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மக்களின் ஃபேவரைட் ஷோவில் ஒன்றாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது முழு கிணற்றை தாண்ட இருக்கிறது. எனவே தற்போது பணப்பெட்டி டாஸ்க் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டாஸ்க்கில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு பணத்தோட எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

பணப்பெட்டியில் வைத்த செம்ம டிவிஸ்ட்.., போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்த பிக்பாஸ்.., வெளியேற போவது யார்?
பெட்டியைத் தூக்க வேண்டும் என்று போட்டியாளர்கள் கங்கணம் கட்டி சுற்றி திரிகிறார்கள். இந்நிலையில் பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர் குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை விசித்ரா தான் 13 லட்சம் பணப்பெட்டியை எடுத்ததாகவும், அவர் தான் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாயாவும், பூர்ணிமாவும் எடுக்க முயற்சி செய்த நிலையில் வெறும் பல்பு மட்டும் தான் மிச்சம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.