பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்ட சரவண விக்ரம் தற்போது சினிமாவில் ஹீரோவாகும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோ மூலம் பிரபலமானவர்கள் பலர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் மேலோங்கி இருந்து வருகிறார்கள். குறிப்பாக பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண், தற்போது தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த “லப்பர் பந்து” திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!
அதே போல் அந்த சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ் தல நடிக்கும் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் மட்டுமின்றி, பிக்பாஸ் சீசன் 3 மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் கவின். அந்த ஷோவில் இருந்து பணப் பெட்டியை தூக்கி கொண்டு வெளியே சென்றாலும் கூட, டாடா படம் மூலம் அனைவரையும் ரசிக்க செய்து வருகிறார். கடைசியாக வெளியான ப்ளடி பெக்கர் கொஞ்சம் சுமாராக தான் ஓடியது.
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் நான் தான் டைட்டில் வின்னர் என்று கூறி ட்ரோலுக்கு ஆளானவர் தான் சரவண விக்ரம். தற்போது இவரும் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரவீன் கே மணி என்பவர் இயக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹசிலி என்பவர் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கி உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?
புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் – வெளியான கியூட் புகைப்படம்!!