மக்களை அதிகம் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 7 இன்னும் இரண்டு நாட்களில் முழு கிணற்றை தாண்ட இருக்கிறது. பைனலிஸ்ட்டாக மாயா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் அர்ச்சனா முன்னேறியுள்ள நிலையில், அவர்களை ஊக்குவிக்க வெளியேறிய எல்லா போட்டியாளர்களும் வீட்டுக்குள் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வினுஷா உள்ளே களமிறங்கிய நிலையில், இன்று நிக்சன் மாஸாக என்ட்ரி கொடுத்திருந்த முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நிக்சன் வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது சில நாட்களுக்கு முன்னர் வினுஷாவின் உடம்பை குறித்து நிக்சன் பேசியிருந்தார். இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்க தொடங்கிய நிலையில், அர்ச்சனாவுக்கும் நிக்சனுக்கும் பெரிய வாக்குவாதம் அளவுக்கு சென்றது.
பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 AD”.., எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியை பிளாக் பண்ண படக்குழு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
நேற்று கூட வினுஷா ஷோவுல வந்து மன்னிப்பு கேட்கட்டும் என்று தினேஷிடம் கூறி இருந்தார். அதே போல் நிக்சன் மனம் திறந்து மன்னிப்பு கேட்க, நீங்கள் தவறு என்று நினைத்து மன்னிப்பு கேட்டால் ஓகே, இல்லனா வேணாம் என்று வினுஷா கூறுகிறார். அதற்கு நிக்சன் ஏன் என்னை தப்பவே போட்ரைட் பண்ணுறீங்க என்று கத்தும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.